Sunday, 29 July 2012

குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் உரிமைகள்


இந்திய ஜனநாயக அமைப்பில் குடியரசுத் தலைவர் என்பவர் முதல் குடிமகனாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் அதிக அதிகாரம் கொண்டது. இருப்பினும் கூட முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்களை கொடுத்திருக்கிறது.

Monday, 23 July 2012

காவல் துறை கைது செய்து போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?



மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

Saturday, 21 July 2012

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்


1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

Friday, 20 July 2012

எவையெல்லாம் சாலை விதிமீறல்கள்:



1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

டி ரைவிங் லைசென்ஸ் பெறுவது எவ்வாறு



டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் சிம்பிளான வேலைதான். ஆனால், அதை எப்படி பெறுவது என்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயம் மிக எளிதான விஷயமாகவே அமையும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பூதாகரமான விஷயமாக்கி ஏராளமான ஏமாற்று வித்தகர்கள் பணத்தை பறித்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்குகிறோம்.

திருமணங்களை பதிவு செய்வது எப்படி


திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.


Wednesday, 18 July 2012

மனைவியால் கொடுமையா? கணவனு‌ம் விவாகரத்து பெறலா‌ம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதாவு‌க்கு‌ம் ,கே.ரமேஷ் என்பவருக்கும்கட‌ந்த 2000ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 6ஆ‌ம் தே‌திதிருமணம் நடந்தது. வேளச்சேரியி‌ல் வ‌சி‌‌த்து வ‌ந்த இருவரு‌க்கு‌ம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடு‌த்து ரமேஷம்  அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகா‌‌ர் கொடு‌த்தா‌ர் ஹேமலதா 

தகவல் தராத நகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது


ஓசூரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க மறுத்த நகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு, 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஓசூர் நகராட்சியில் வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி நிர்ணயித்த கட்டணம் 5 ரூபாயை விட அதிகமாக, 7 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கூடுதலாக 2 ரூபாய் வசூலிக்கப்படுவது ஏன்? மற்றும் நடவடிக்கை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் கோரி ஓசூர் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் அருணாச்சலம், தமிழக அரசின் நகராட்சியில் ஆவண தகவல் அலுவலரிடம் விவரங்களை கேட்டார்.

Tuesday, 10 July 2012

தொழிற் சங்கம் பதிவு செய்யும் நடைமுறைகள்


தொழிற்சங்கம் ஓன்று கட்டாயம் பதிவு செய்யப்பட  வேண்டும்  என்று  அவசியமில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட  தொழிற்சங்கங்களுக்கு, இச்சட்டத்தின் கீழ் சில சலுகைகளும் விளக்களிப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை பதிவு செய்யப்படாத தொழிர்சங்கங்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே நடைமுறையில் எல்லாத் தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
சங்கங்களின் பதிவாளர் நியமனம்
பிரிவு.3  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொழிற்சங்கங்களின் பதிவாரல் உரிய அரசால் நியமிக்கப்படுவார். அத்துடன் அப்பதிவாளரின் வழிகாட்டுதல், மற்றும் மேற்பார்வையின் கீழ்  ஒரு குறிப்பிட்ட , வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பதிவாளரின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் 

49 ஒ’வை பயன்படுத்துவது எப்படி



வாக்காளர்கள் யாருக்காவது வாக்களித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதையும் நாம் பதிவு செய்யலாம். உங்களுடைய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்குமே நீங்கள் வாக்களிக்க விரும்பா விட்டால் நீங்கள் அதை பதிவு செய்ய வாக்குசாவடிக்கு சென்றவுடன் வாக்குசாவடி அதிகாரியிடம் உங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும்.வாக்களர்களின் பெயர்கள் கொண்ட பதிவேட்டில் உங்களது பெயரை பதிவு செய்வார் அந்த அதிகாரி , அந்த பதிவேட்டியிலையே உங்களது பெயருக்கு எதிராக ‘எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கின்றேன்’ என்றோ , அல்லது ‘எந்த வேட்பாளருக்கும் எனது வாக்கு இல்லை’ என்றோ நாம் எழுதினாலே போதும்.உங்கள் ஒட்டு பதிவாகி விடும். அதில் 49  ஒ’விற்கு  ஓட்டளித்தவர்கள் தனியாக அறிவிக்கப்படுவார்கள்.