தொழிற்சங்கம் ஓன்று கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு, இச்சட்டத்தின் கீழ் சில சலுகைகளும் விளக்களிப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை பதிவு செய்யப்படாத தொழிர்சங்கங்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே நடைமுறையில் எல்லாத் தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
சங்கங்களின் பதிவாளர் நியமனம்
பிரிவு.3 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொழிற்சங்கங்களின் பதிவாரல் உரிய அரசால் நியமிக்கப்படுவார். அத்துடன் அப்பதிவாளரின் வழிகாட்டுதல், மற்றும் மேற்பார்வையின் கீழ் ஒரு குறிப்பிட்ட , வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பதிவாளரின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும்
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் கூடுதல் மற்றும் துனைபதிவாளர்களை உரிய அரசு நியமிக்கலாம்.
ஒரு மாநிலத்திற்குள் மட்டும் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே உரிய அரசாகும். ஒன்றுக்குமேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை மத்திய அரசு உரிய அரசாகும் .
பதிவு செய்தல் (பிரிவு – 4 )
குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் சேர்ந்த ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கலாம். அவர்கள் தொழிற்சங்க சட்டதிட்டங்களுக்கு
உட்பட்டு நடப்பதாக உறுதிகூறி பிரிவு – 5 ல் கண்டவாறு சங்கப்பதிவாளரிடம் விண்ணப்பம் செய்வதன் மூலம் ஒரு சங்கத்தை பதிவு செய்ய கொள்ளலாம்.
ஆனால், அது தொழிலாளர்களின் தொழிற்சங்கமாக இருந்தால், அச்சங்கம் தொடர்புடைய நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மொத்த தொழிலாளர்களில் 10 சதவிகிதம் பேர் அச்சங்கத்தில் உறுப்பினர்களாய் இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
அது போல பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஏழு பேர்களும் அச்சங்கம் தொடர்ப்புடைய நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பின்னர் , சங்கம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் அதனை சமர்ப்பித்த நபர்களில் சிலர் அச்சங்கத்தின் உறுப்பினராக இல்லாமல் போய்விட்டாலோ அல்லது அச்சங்கத்தில் இருந்து விலகிவிட்டாலோ அது சங்கப்பதிவை பாதிக்காது. ஆனால் அத்தகைய நபர்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டதாக இருப்பின் அச்சங்கத்தை பதிவு செய்ய முடியாது.

No comments:
Post a Comment