உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 03 .10 .2018 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவருக்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தக் கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றம், வெளியேற்றம் ஆகியவை மட்டுமே அவசர வழக்கு என்ற அடிப்படையில் விசாரிக்கப்படும் மற்றவற்றுக்குத் தனி விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.
யாராவது ஒருவர் நாளைத் தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசரவழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசரவழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment