டெல்லியை சேர்ந்த சுபாஷ் அஹுஜா என்பவர், கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம், டாட்டா இண்டிகா கார் ஒன்றை நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே காரில் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கார் நிறுவனத்தின் உத்திரவாதக் காலம் முடிவதற்குள், நவம்பர் 2000-வது ஆண்டிற்குள், 36 தடவை காரில் ரிப்பேர் வேலைகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. உத்திரவாதக் காலம் முடிந்தபின்னரும், கார் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், நிறுவனம் வேறு என்ஜினும் மாற்றிக்கொடுத்துள்ளது. அப்போதும் வாடிக்கையாளரின் பிரச்சினை குறைந்தபாடில்லை.
இதன்பின்னரே, சுபாஷ் அஹுஜா நீதிமன்றத்தின் உதவியை நாடினார். வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், உத்திரவாதகாலம் முடிவதற்குள் 36 முறை காரில் பிரச்சினைகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக என்ஜினையே மாற்றிக்கொடுத்திருப்பது உற்பத்திக் கோளாறையே காட்டுகின்றது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக 2.5 லட்சம் வழங்கவேண்டும் என்று நீதிபதி அசோக் பன் உத்தரவிட்டார்.
நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே கார் என்ஜினை மாற்றிக்கொடுத்ததாக டெல்கோ நிறுவனம் வாதிட்டாலும், நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ரிப்பேர் செய்துதர முடியும் எனும்போது, எந்த ஒரு நிறுவனமும் என்ஜினை மாற்றிக்கொடுக்காது என்று கூறி டெல்கோ நிறுவனத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment