Thursday, 4 October 2018

அவசர வழக்கு விசாரணை குறித்து தனி விதிமுறைகள் வகுக்கப்படும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 03 .10 .2018  அன்று   பதவி ஏற்றுக்கொண்டார்.  வடகிழக்கு மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, 3 October 2018

பத்திரப்பதிவு துறையில் ஆன் லைன் பதிவு

தமிழக அரசு பல்வேறு நல்ல முயற்சிகளை செய்து வருகிறது . தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. பதிவுத்துறை இணையதளத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்றிதழ், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பெறலாம். ஆன்லைனிலே வில்லங்கச் சான்றிதழ்களையும் பெற முடியும்.அடுத்த கட்டமாக   பத்திரப் பதிவுகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் . இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.நாம் எந்த நேரத்திற்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வரை நாம் முன்பே தெரிந்து கொள்ள இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

 https://tnreginet.gov.in/portal/என்ற இனைய தளம் மூலம் அரசு நமக்கு பல சேவைகளை அளிக்கிறது. அதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Sunday, 13 August 2017

இலவச சட்ட ஆலோசனை

நீங்கள் இலவச சட்ட ஆலோசனை பெற 8 .30 P M . முதல் 9 .௦௦ P.M. வரை 9843464246 என்ற என்னை தொடர்பு கொண்டு இலவச சட்ட ஆலோசனை பெறலாம்.   

Monday, 5 October 2015

பட்டாசு வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உலக நாடுகள் அனைத்துமே  பெருகி வரும் சுற்று சூழல் மாசை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், பெருநகரங் களில் அதிகமாக மாசு ஏற்பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நமது மத்திய அரசு, வரும் 2019- ம் ஆண்டுக்குள் ‘பாரத் 5-ம் நிலை’ புகை கட்டுப்பாட்டு விதிகளை வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், டெல்லியை சேர்ந்த பச்சிளம் குழந்தைகள், மாசுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளனர். 

Saturday, 3 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு  கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை  பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது சட்டப்படி தவறு. தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாகும்.வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்கப்படும் இத்தகைய செயலை தடை செய்யுமாறு கடந்த 16.11.2011 அன்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்தேன்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணா ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில்,தேசிய கொடியை வடிவம் மாற்றி விற்பனை செய்வது தவறு என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதியரசர் சதாசிவத்திற்கு நமது வாழ்த்துக்கள்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி​யாகப் பொறுப்பெற்றுள்ளார் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி.  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.